கலந்தாய்வுக்கான அழைப் புக் கடிதம் மாணவர்களுக்கு உடனடியாக அனுப்பப்படும் என்று தமிழ்நாடு சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலைவரும், சட்டப் பல்கலைக் கழகத்தின் பதிவாளருமான பேராசிரியர் எம்.எஸ்.சவுந்தரபாண் டியன் நேற்று தெரிவித்தார்.கட் ஆப் மதிப்பெண் பட்டியல்ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கட் ஆப் மதிப்பெண் பட்டியலை இட ஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tndalu.ac.in) பார்க்கலாம்.
கட் ஆப் மார்க் விவரம் வருமாறு:
ஓசி - 89.875
பிசி - 81.250
பிசி (முஸ்லிம்) - 77.000
எம்பிசி, டிஎன்சி - 79.875
எஸ்சி - 80.000
எஸ்சி (அருந்ததியர்) - 79.375
எஸ்டி - 65.875
ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரே கட் ஆப் மதிப்பெண் வரும் பட்சத்தில் யார் வயதில் மூத்தவரோ அவருக்கு கலந்தாய்வின்போது முன்னுரிமை அளிக்கப்படும்.








