இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
91 கடைகளில் விற்பனை
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வெளிச்சந்தையில் உயரும் போது, விலைகளை கட்டுக்குள் வைக்கும் தீவிர நடவடிக்கைகளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டு வருகிறார்.
சென்னையில் எங்கே?
குறைந்த விலையில் துவரம் பருப்பு விற்பனை, சென்னையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அண்ணாநகர் மேற்கு, நந்தனம், அசோக்நகர், ஆர்.கே. மடம் ரோடு, இந்திராநகர், சி.பி.ஆர். சாலை, பெரியார் நகர், எம்.எம்.டி.ஏ.காலனி, கோபாலபுரம், அண்ணாநகர் மெயின், தம்பு சாமி ரோடு, அண்ணா நெடும்பாதை, தாம்பரம், கே.கே.நகர் மேற்கு, வி.எம்.தெரு, சாந்தி காலனி, திருவான்மியூர், ஆற்காடு சாலை, ஆவடி மற்றும் போரூர் அமுதம் அங்காடிகள்,
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் தேனாம்பேட்டை, ஆர்.ஏ.புரம், பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, அசோக் நகர், ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம், செனாய் நகர், பெரியார் நகர், மீனம்பாக்கம் மற்றும் துரைப்பாக்கம் சுயசேவைப் பிரிவு விற்பனை நிலையங்கள்,
56 இடங்கள்
பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் அண்ணா நகர், செனாய் நகர் மற்றும் அரும்பாக்கம் விற்பனை நிலையங்கள், வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கொடுங்கையூர், பிராட்வே, மணலி மற்றும் எம்.ஆர்.எப். அங்காடிகள், வண்ணாரப்பேட்டை கூட்டுறவு பண்டகசாலையின் ராயபுரம் மற்றும் பெரியார் நகர் அங்காடிகள்
மாம்பலம் தொடக்க கூட்டுறவு பண்டகசாலையின் மேற்கு மாம்பலம் அங்காடி, அடையார் மகளிர் கூட்டுறவு பண்டகசாலையின் அடையாறு அங்காடி, கஸ்தூரிபாய் மகளிர் கூட்டுறவு பண்டகசாலையின் ஆதம்பாக்கம் அங்காடி, சென்னையில் செயல்படும் தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகளான ஜார்ஜ்டவுன் (சவுகார்பேட்டை), பாரதியார் (புதிய வண்ணாரப்பேட்டை), தட்டான்குளம் (சூளை), ஐ.சி.எப்., தண்டையார் நகர் (தண்டையார் பேட்டை), வியாசர்பாடி ஆகிய விற்பனை நிலையங்களிலும்;
காஞ்சீபுரம் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் நந்தம்பாக்கம், போரூர், மடிப்பாக்கம், தாம்பரம், செம்பாக்கம் மற்றும் குரோம்பேட்டை விற்பனை நிலையங்கள் ஆகிய 56 இடங்களிலும்;
கோவை, திருச்சி
கோயம்புத்தூர் மாநகரில், 10 விற்பனை அங்காடிகளிலும் திருச்சி மாநகரத்தில் 14 விற்பனை அங்காடிகளிலும், மதுரை மாநகரில் 11 விற்பனை அங்காடிகளிலும் ஆக மொத்தம் 91 விற்பனை அங்காடிகள் வாயிலாக இறக்குமதி துவரம்பருப்பு அரை கிலோ ரூ.55 மற்றும் ஒரு கிலோ ரூ.110 என்ற அடிப்படையில் நவம்பர் 1-ந் தேதி (இன்று) முதல் விற்பனை செய்யப்படும்.
குறைந்த விலையில் இறக்குமதி துவரம்பருப்பு விற்பனை திட்டம் தொடங்கப்படும் தினமான நவம்பர் 1-ந் தேதியிலும் (ஞாயிற்றுகிழமை) இந்த 91 அங்காடிகளும் திறக்கப்பட்டு, குறைந்த விலை இறக்குமதி துவரம்பருப்பு விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.








