வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில்
இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை
வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. அப்போது முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்தது.
அந்த மேலடுக்கு சுழற்சி, கடந்த சில தினங்களாக தென்மேற்கு வங்கக்கடலில்
நிலைகொண்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும்,
உள்மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. அப்போது முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்தது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, நேற்று காலை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருப்பதால் கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கனமழை பெய்யும்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை(இன்று) முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில், இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருக்கிறது.
இதனால், அடுத்த 48 மணி நேரத்துக்கு (2 நாட்கள்) மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்.
சென்னையில் 2 நாள் தொடர் மழை
சென்னையை பொறுத்தவரையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஞாயிற்றுக்கிழமை(இன்று) முதல் 2 நாட்களுக்கு தொடர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அரபிக்கடல் பகுதியில் உருவான ‘மேக்’ புயல், தற்போது சொக்காத்தோர தீவுக்கு கிழக்கு வடகிழக்கே 670 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த புயல் மேற்கு நோக்கி நகர்ந்து, வலு இழந்து, ஏமன் வளைகுடா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
மழை அளவு
நாகப்பட்டினத்தில் 19 செ.மீ., சீர்காழியில் 13 செ.மீ., திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ., அணைக்காரன்சத்திரத்தில் 8 செ.மீ., சிதம்பரம், திருவாரூர், நாங்குநேரி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., சாத்தான்குளம், மயிலாடுதுறை, பாளையங்கோட்டை, மகாபலிபுரம், திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., மயிலாடி, திருவிடைமருதூர், மதுக்கூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., செங்கல்பட்டு, அரிமளம், கடலூர், பாம்பன் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.