ஓவியக் கண்காட்சி நடத்த கலைப் பண்பாட்டுத் துறை நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து அந்தத் துறை அண்மையில் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழுவின் மூலம், ஓவிய,
சிற்பக் கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த கலைக் காட்சியை தனியாகவோ,
கூட்டாக நடத்த அரசின் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில, தேசிய அளவிலோ நடைபெற்ற
கலைக்காட்சிகளில் பங்கு கொண்ட, நுண்கலைகளில் ஈடுபாடு கொண்ட
தகுதிவாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
"கலைச்செம்மல்' விருது பெற்றவர்கள், நுண்கலை பயின்று
வரும் மாணவர்கள், இதற்கு முன் திட்டத்தில் பயனடைந்தோர் விண்ணப்பிக்கத்
தேவையில்லை.விண்ணப்பிப்போர் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய தன் விவரக்
குறிப்பு, சிறந்த படைப்புகளின் புகைப்படங்கள் (5 எண்ணிக்கைகள்),
படைப்புத்திறன் பற்றிய செய்திக் தொகுப்புகள் அடங்கிய விவரங்களை இணைத்து
"ஆணையர், கலை பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம்,
தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600 008.
தொலைபேசி : 044-28193195, 28192152' என்ற முகவரிக்கு
நவம்பர் 30-ஆம் தேதிக்குள் அனுப்பலாம். இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.