ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை, அடுத்த மாதம் அமல்படுத்தக் கூடாது;
அமல்படுத்துவதை தள்ளி வைக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, நிதி
நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழகம் உட்பட, ஐந்து மாநிலங்கள் கோரிக்கை
விடுத்துள்ளன.சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி, ஏ.கே.மாத்துார் தலைமையிலான
ஏழாவது ஊதியக் குழு, அதன் பரிந்துரையை, மத்திய அரசிடம் அளித்துள்ளது. அதில், 'மத்திய அரசு ஊழியர்களுக்கு, 23.55 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும், 2016, ஜன., 1 முதல், அதை அமல்படுத்த வேண்டும்' என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஊதிய உயர்வால், மத்திய அரசுக்கு,
1.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'ஜனவரி முதல், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தும்
திட்டத்தை, தள்ளி வைக்க வேண்டும்' என, பஞ்சாப், தமிழகம், மேற்குவங்கம்,
ஒடிசா மற்றும் உ.பி., ஆகிய ஐந்து மாநிலங்கள், மத்திய அரசைக் கேட்டுக்
கொண்டுள்ளன.
இதுகுறித்து, பஞ்சாப் நிதி அமைச்சர் பி.எஸ்.டின்ட்சா கூறியதாவது:மத்திய
அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்படும்போது, மாநில அரசுகளும், தங்களின்
ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவது வழக்கம். இதனால், மாநில அரசுகளுக்கு
கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். பஞ்சாப் அரசு, ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதனால், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவதை தள்ளி வைக்கும்படி, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
பாதிப்பில்லை: இதற்கிடையே, ''மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வால், ஆந்திராவுக்கு எந்த பாதிப்பும் இல்லை,''
என,
அம்மாநில முதன்மைச் செயலர், பி.வி.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
''ஆந்திராவில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு ஏப்ரலில், அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இனி, 2019ல் தான், புதிய ஊதிய உயர்வு அமலுக்கு வரும் என்பதால், மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு, ஆந்திரா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை,'' என, ரமேஷ் மேலும் கூறினார்.
தமிழகமும், மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வை தள்ளி வைக்குமாறு கோரியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், இந்தத் தகவலை தமிழக அரசு வட்டாரங்கள் உறுதி செய்யவில்லை.