அவசரமாக முடிக்கப்பட வேண்டிய பணிகளுக்காக, சில ஊழியர்கள் வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டனர்; மற்றவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
எனினும், இதர பணிகள் பாதிக்கப்பட்டதால், 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டது. பல நாட்களுக்கு பின், ஐ.டி., நிறுவனங்கள் டிச., 7ல் திறக்கப்பட்டன.
அப்போது ஊழியர்களுக்கு, ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. மழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய, சனிக்கிழமையும் பணிக்கு வர வேண்டும் என, வாய்மொழியாக உத்தரவிடப்பட்டது.








