தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்(டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
டி.என்.பி.எஸ்.சி சார்பில் கடந்த மாதம் 12-ந்தேதி கிராம நிர்வாக அலுவலர்
பதவியை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், நேரடி
நியமனத்துக்கு தேர்வாளர் கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்ய
இறுதி நாளாக 14.12.2015(நேற்று) அறிவிக்கப்பட்டிருந்தது.
பெருமழை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக இந்த
தேர்வுக்கான விண்ணப்பிக்கும் இறுதிநாள் வருகிற 31-ந்தேதி வரையும்,
விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசிநாள் அடுத்த மாதம்(ஜனவரி) 2-ந்தேதி வரையும்
நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.