வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்க இனி "பான்' (நிரந்தர கணக்குஎண்)
அட்டை தேவையில்லை என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது.வங்கி சேமிப்புக்
கணக்கு உள்பட பல்வேறு வர்த்தக விஷயங்களில்"பான்' (நிரந்தர கணக்கு எண்)
அட்டையின் அவசியம் குறித்த சட்டப் பிரிவில் (வருமான வரி சட்டப் பிரிவு
114பி) திருத்தங்களை வருமான வரித் துறை செய்துள்ளது.
புதிய
நடைமுறை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 20 இனங்களுக்கு புதிய
நடைமுறை வருகிறது.பரிவர்த்தனை, பழைய நடைமுறை, புதிய நடைமுறை ஆகியன
அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.