விருதுநகர் மாவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு
பயிலும் மாணவன் ஜெயக்குமார். இம்மாணவன் செயல்திட்டம் இஸ்ரோ விஞ்சானிகளால்
பாராட்டப்பட்டு இளம்விஞ்சானியாக பயிற்சி அளிக்க இஸ்ரோ விஞ்சானிகளால்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளான்.
விருதுநகர் மாவட்டம்
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 100க்கு 100 சதவீதம் தேர்ச்சி அடையச் செய்த
ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா முதன்மைக்கல்வி அலுவலர் திரு.புகழேந்தி
அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சாலமன்
பாப்பையா பட்டிமன்றத்தின் சிறப்பு பேச்சாளரான் இராமச்சந்திரன் மற்றும்
லியோனி பட்டிமன்றத்தின் பேச்சாளர் மற்றும் கவிஞரான நந்தலாலா ஆகியோர் பங்கு
பெற்றனர்.
இவ்விழாவில்
இஸ்ரோ விஞ்சானிகளால் பாராட்டப்பட்ட இளம்விஞ்சானியான ஜெயக்குமாரை கலசலிஙக்ம்
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீதரன் ,முதன்மைக்கல்வி அலுவலர்
திரு.புகழேந்தி,சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தின் சிறப்பு பேச்சாளரான்
இராமச்சந்திரன் மற்றும் லியோனி பட்டிமன்றத்தின் பேச்சாளர் மற்றும் கவிஞரான
நந்தலாலா மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து
பாராட்டினர்.
இதுவரை தொலைக்காட்சிகளில் மட்டுமே பட்டிமன்ற
பேச்சாளார்களை பார்த்து வந்த நான் அவர்களை முதன் முதலில் நேரில்
பார்க்கும் வாய்ப்பும் , முதல் வாய்ப்பிலேயே பாராட்டு கிடைக்கப் பெற்றதும்
மிக்க மகிழ்ச்சியான தருனமாக இருந்தது.
பாராட்டி மகிழ்ந்த முதன்மைக்கல்வி அலுமலர் திரு புகழேந்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.