புதுடில்லி:காற்றில் உள்ள மாசு குறித்து உலக அளவில் எடுக்கப்பட்ட
ஆய்வில், மிகவும் மோசமான 20 நகரங்களில், 13 இந்திய நகரங்கள்
இடம்பெற்றுள்ளன.
இதில்,
ஒரே ஆறுதல், கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த டில்லி, 11வது இடத்துக்கு
முன்னேறியது.உலகின் அதிக மாசடைந்துள்ள நகரங்களின் பட்டியலை, உலக சுகாதார
அமைப்பு, நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில், கடந்த ஆண்டு முதல்
இடத்தில் இருந்த டில்லி, தற்போது, 11வது இடத்திற்கு முன்னேறியது. அதே
நேரத்தில், மோசமான, 20 நகரங்களில், 13 இந்திய நகரங்கள் இடம் பெற்று உள்ளன.
உலகம் முழுவதும், 103 நாடுகளில் உள்ள, 3,000 நகரங்கள், காற்றில் உள்ள மாசுவின் அடிப்படை யில் பட்டியலிடப்பட்டுள்ளன. பி.எம் - 2.5 எனப்படும், ஒரு கன மீட்டரில், 2.5 மைக்ரான் அளவுள்ள, மாசு ஏற்படுத்தும் பொருட்கள் எவ்வளவு உள்ளன என்பதன் அடிப்படையில், காற்றின் துாய்மை கணக்கிடப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின்படி, 10 மைக்ரோகிராம் தான் அனுமதிக்கப்பட்ட அளவு. கடந்த முறை கணக்கெடுப்பில், 1,600 நகரங்கள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த முறை, 3,000 நகரங்கள் ஆய்வுக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின்படி, ஈரானின் ஜாபோல் நகர், பட்டியலில் முதலிடத்
தில் உள்ளது. அமெரிக்காவின் சின்கிளார் நகரம் தான், மிகவும் குறைந்த மாசு
உள்ள நகரமாக உள்ளது.இது ஏமாற்று வேலைசுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறியதாவது:
காற்றில் உள்ள, பி.எம் - 2.5 என்ற பொருளின் கணக்கை மட்டும் உலகம் முழுவதும், 103 நாடுகளில் உள்ள, 3,000 நகரங்கள், காற்றில் உள்ள மாசுவின் அடிப்படை யில் பட்டியலிடப்பட்டுள்ளன. பி.எம் - 2.5 எனப்படும், ஒரு கன மீட்டரில், 2.5 மைக்ரான் அளவுள்ள, மாசு ஏற்படுத்தும் பொருட்கள் எவ்வளவு உள்ளன என்பதன் அடிப்படையில், காற்றின் துாய்மை கணக்கிடப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின்படி, 10 மைக்ரோகிராம் தான் அனுமதிக்கப்பட்ட அளவு. கடந்த முறை கணக்கெடுப்பில், 1,600 நகரங்கள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
எடுத்துக் கொள்கின்றனர்.
அதே நேரத்தில், ஆக்சைடுகள் மற்றும் நைட்ரஜனின் அளவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வில்லை. அதனால் தான், இந்த பட்டியலில் மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் இடம் பெறவில்லை.இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல், 20நாடுகளை எடுத்துக் கொண்டால், இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய ஆசிய நாடுகளும், ஈரான், சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமே உள்ளன.
இந்த ஆய்வு, ஏமாற்று வேலை. இவ்வாறு நிபுணர்கள் கூறுகின்றனர்.தப்பியது சென்னைஉலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில், முதல், 20 நகரங்களில் இடம்பெற்றுள்ள, 13 இந்திய நகரங்கள் அனைத்தும் வட மாநிலங்களில் உள்ளன. சென்னை உள்ளிட்ட தென் மாநில நகரங்கள் எதுவும் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.தேசிய அளவிலும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்றின் தரம் குறித்து புள்ளிவிவரங்களை சேகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரியில் பதிவான காற்றின் மாசு குறித்த தகவல்களின் படியும், சென்னை
உள்ளிட்ட தென் மாநில நகரங்களில் காற்றின் தரம், சிறப்பாக உள்ளது. காற்றின் தரம் சிறப்பாக உள்ள நகரங்களில் பெங்களூருவும், அதற்கடுத்து சென்னையும் இடம்பெற்று உள்ளன.
'டாப் - 20'
காற்றில் அதிக மாசு உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில், முதல் 20 நகரங்களில், 13 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள் ளன.முதல்,20 இடங்களைப் பெற்ற நகரங்கள்:
1. ஜாபோல், ஈரான்
2. குவாலியர்
3. அலகாபாத்
4. ரியாத், சவுதி அரேபியா
5. அல் - ஜுபைல்,
சவுதி அரேபியா
6. பாட்னா
7. ராய்ப்பூர்
8. பர்மென்டா, கேமரூன்
9. ஜின்ங்டாய், சீனா
10. பாவ்டிங், சீனா
11. டில்லி12. லுாதியானா
13. டம்மம், சவுதி அரேபியா
14. ஷீஜியாஜுவாங்க், சீனா
15. கான்பூர்

16. கன்னா
17. பிரோசாபாத்
18. லக்னோ
19. ஹாண்டன், சீனா
20. பெஷாவர், பாகிஸ்தான்
காரணம் என்ன?
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
* உலக அளவில், கடந்த ஐந்து ஆண்டுகளில், காற்றில் மாசு, 8 சதவீதம் உயர்ந்துள்ளது
* மத்திய கிழக்கு, தென்கிழக்குஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பிராந்தியங்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு, 5 - 10 மடங்கு வரை, காற்றில் மாசு அதிகரித்துள்ளது
* இந்த புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில்தான் பாதிப்புகள் மிகவும் அதிகமாக உள்ளனl வளர்ந்த நாடுகளை விட, வளரும் நாடுகளில்தான் அதிக பாதிப்பு உள்ளது. இந்த நாடுகளில் அதிக அளவு புதிய கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுவது இதற்கு முக்கிய காரணம். வளர்ந்து வரும் நாடுகளில் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்துஉள்ளதும் காரணமாக கூறப்படுகிறது
* காற்று மாசுவால், உலகெங்கும், ஆண்டுதோறும், 30 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
மலேரியா, எய்ட்ஸ் போன்றவற்றால் உயிரிழப்பதைவிட, இது மிகவும் அதிகம். 2050ல், இது இரட்டிப்பாகும் என கணிக்கப்பட்டுள்ளது.