பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்
மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேல் நிலை (HSC) படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிப்படியும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு 3% சதவீத இடங்கள் தமிழக அரசின் விதிப்படி ஒதுக்கப்படும்.
மேலும் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படிப்புக்கு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் முற்றிலும் இது திறந்தவெளி கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இது குறித்து பல்வேறு வகையில் விளம்பரம் செய்ய உள்ளோம்.ஏழை மாணவர்களுக்கு சீட் கிடைத்தால் அவர்களுக்கு கல்வி கடன் பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது என்றார்.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும். கலந்தாய்வு அட்டவணை மற்றும் கலந்தாய்வுக்கான அனுமதி கடிதத்தை தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணைய தளத்தில் ஜீலை முதல் வாரத்தில் பதிவிறக்கம் செய்து கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு தனியாக கலந்தாய்வு கடிதம் அனுப்பப்படமாட்டாது. இந்நிகழ்ச்சியில் மருத்துவபுல முதல்வர் சிதம்பரம்,பதிவாளர் ஆறுமுகம் உள்ளிட்ட அனைத்துதுறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் விபரங்களுக்கும், தகவல்களுக்கும் பல்கலைக்கழக இணைய தளம் www.annamalaiuniversity.ac.in பார்க்கவும். தொடர்புக்கு auadmission2016@gmail.com மேலும் உதவி மைய தொலைபேசி எண்களிலும் (04144-238348 மற்றும் 238349) தகவல்கள் பெறலாம்.








