புத்தாக்கக் கற்பித்தல் பயிற்சியே ஆசிரியர்களின் தற்போதைய தேவையாக இருக்கிறது என ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரி (எம்.சி.சி.) வளாக மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 32-ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இதில், அவர் பேசியதாவது:-
மாணவர்களுக்கான கற்றல் வசதிகள், கற்பித்தல் பயிற்சிகள், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகியனதான் சிறந்த கல்விக் கூடங்களுக்கு தனித்துவத்தை வழங்குகிறது.
கல்வித் துறைக்கு ஆசிரியர்களின் புத்தாக்கக் கற்பித்தல் பயிற்சி தற்போதைய தேவையாக உள்ளது. எனவே, மதிப்பீட்டு முறையில் புத்தாக்க முயற்சிகள், தேவைக்கேற்ற கல்விமுறையும், பிற கல்வி நிறுவனங்களுடனான கூட்டு முயற்சியும் பள்ளிகளில் அதிகரித்து வருவது காலத்தின் கட்டாயமாகும் என்றார்.
எம்சிசி இயக்குநர்கள் குழுத் தலைவர் எம்.கே.மேமன், நிறுவனத்தைச் சேர்ந்த ஆர்.டபிள்யு. அலெக்சாண்டர் ஜேசுதாசன், தாளாளர் யக்ஞா சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.