உடல் நலம் சார்ந்த குறிப்புகள்'புதினா டீ"
‘வெண்டைக்காய் சாப்பிடு... மூளை வளரும்’ என்ற அறிவுரை கேட்டு வளர்ந்த
தலைமுறை நாம். கொஞ்சம் வெளி உலகம் புரியும்போது ‘வல்லாரை சாப்பிடுவது ஞாபக
சக்திக்கு நல்லது’ என்ற விளம்பரங்களைப் பார்த்து வியந்தோம்.இப்போது காலமும்
கருத்தும் கொஞ்சம் வேற மாதிரி... ஆண்ட்ராய்டு மொபைலின் அடுத்த வெர்ஷன்
போல, ஞாபகசக்தியை அதிகரிப்பதில் புதினாவுக்கு இணையில்லை என்பதைக்
கண்டுபிடித்திருக்கிறார்கள்!
கண்களுக்குக் குளிர்ச்சி தரும் பச்சைப்பசேல் நிறம், வர்ணிப்புக்கு அப்பாற்பட்ட வாசனை, சமையலுக்கு சுவை கூட்டும் குணம் கொண்டது புதினா என்பது நமக்குத் தெரியும். ‘அதே புதினா நினைவாற்றலுக்கும் நல்ல மருந்து சார்’ என்பதைத்தான் ஆராய்ச்சி செய்து பரிந்துரை செய்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.இங்கிலாந்தின் நார்த் அம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் 180 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புதினா மகத்துவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் பங்கு கொண்ட 180 பேருக்கும் நினைவுத்திறன் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. சிறிது நேரம் கழித்து ஒவ்வொருவருக்கும் புதினா டீ கொடுக்கப்பட்டது. 20 நிமிடம் ஓய்வுக்குப் பிறகு, மீண்டும் அதே கேள்விகள் கேட்கப்பட்டன.
‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ என்பதுபோல, முதலில் பதில் சொல்லத் தெரியாமல் திணறிய அதே கேள்விகளுக்கெல்லாம் புதினா டீ சாப்பிட்ட பிறகு சரியான பதில் சொல்லி சபாஷ் பெற்றார்கள் ஆய்வில் பங்கு கொண்டவர்கள். இதன்மூலம் மூளையின் நினைவுத் திறனை புதினாவில் உள்ள வேதிப்பொருட்கள் மேம்படுத்துகிறது என்பது கண்டறியப்பட்டது.
பழைய நினைவுகளைக் கொண்டு வரவும், கல்வி மற்றும் தொழிலில் சிறந்து விளங்குவதற்கான நினைவுத்திறனை மேம்படுத்தவும், மந்த புத்தியை விரட்டி எச்சரிக்கை உணர்வைக் கொடுக்கவும் புதினா பயன்படுகிறது என்று இந்த ஆய்வில் நிரூபணமாகி இருக்கிறது என்று பெருமையாகச் சொல்லியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இனி வீட்டில் டீ போடும்போது 10 புதினா இலைகளையும் சேர்த்துப் போடுவீங்கதானே!
-நன்றி குங்குமம் டாக்டர்