முதலில், இது போன்ற அறியாதவர்களிடமிருந்து வரும் செய்திகளைப் படிக்கும் இன்பாக்ஸ் திறப்பதற்கு, 2012ல், ஒரு டாலர் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர், இது உயர்த்தப்பட்டு, 100 டாலர் (மார்க் உட்பட அனைவருக்கும்) வரை சென்றது. பின்னர், இது இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.உங்கள் அக்கவுண்ட்டில் நுழைந்த நபர் யார்?சில வேளைகளில், உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் பேஜில், வேறு யாரோ ஒருவர் நுழைந்து பார்க்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. உங்கள் பாஸ்வேர்டைத் தெரிந்த ஒருவர் அல்லது நீங்கள் உங்கள் நண்பர் வீட்டில் பேஸ்புக் பார்த்துவிட்டு, கணக்கை மூடாமல் வந்த பக்கத்தைப் பார்த்த ஒருவர் என அது யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அவரை நீங்கள் யாரெனத் தெரிந்து கொள்ள வேண்டுமா? முதலில் உங்கள் settings page (https://www.faceook.com/settings?ta=account) செல்லவும். அங்கே, Security போல்டரில், "Where You're Logged In" என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு, நீங்கள் பேஸ்புக் தளத்தை அணுகிய விபரங்கள் அனைத்தும் காட்டப்படும். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் எனப் பிரிக்கப்பட்டு இந்த பட்டியல் இருக்கும். இதில் நீங்கள் பயன்படுத்தாத சாதனம், பிரவுசர் மற்றும் நாள் இருப்பின், அதன் அருகே உள்ள End All Activity என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரில் பேஸ்புக் பார்த்துவிட்டு அதிலிருந்து முறையாக முடித்து வைத்து வெளியேறாமல் இருந்தால், அதுவும் காட்டப்படும். அதனை இங்கிருந்து முடித்துவிடலாம்.ரகசிய உணர்ச்சி சித்திரங்கள்கம்ப்யூட்டர் வழியாக நட்பு தொடர்புகளில், நாம் நம் உணர்வுகளைத் தெரிவிக்க, அதற்கென அமைந்த சிறிய படங்களை இணைப்பது வழக்கமாக உள்ளது. இவற்றை எமோட்டிகான் (emotion+icon) என அழைக்கிறோம். பேஸ்புக்கில், பல எமோட்டிகான்கள் உள்ளன. ஆனால், அவை நாம் எளிதாக அறியும் வகையில் இல்லை. நாம் பொதுவாகப் பயன்படுத்துவது :)/ :D/ ^_^ ஆகியவற்றையே. ஆனால், இன்னும் சில உள்ளன. அவை: (y) = வெற்றி எனப்படும் 'தம்ப்ஸ் அப்" அடையாளம். (^^^) =பெரிய வெள்ளை ஷார்க் மீன், :|] = ரோபோ என அழைக்கப்படும் இயந்திர மனிதன், <(") = பெங்குவின் பறவை. இவற்றை நீங்கள் வால் போஸ்ட், சேட், நம் கமெண்ட் ஆகியவற்றில் பயன்படுத்தலாம். இவற்றை டைப் செய்தவுடனேயே, அவை அந்த சிறிய ஐகானாக மாறும். எடுத்துக் காட்டாக, பெங்குவின் பறவைக்கானதை டைப் செய்தால், உடனே அது சிறிய பெங்குவின் பறவையாக மாறும். (உடனே பேஸ்புக்கில் டைப் செய்து பாருங்கள்.)மெசஞ்சர் வழியாக பைல் பரிமாற்றம்பேஸ்புக் மெசஞ்சர் விண்டோவை நீங்கள் திறந்தால், அதில் சிறிய கியர் ஐகான், வலது மேல்புறம் இருப்பதனைப் பார்க்கலாம். இதில் தட்டினால், அதில் "Add Files...", என்று ஓர் ஆப்ஷன் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், உடனே கம்ப்யூட்டரிலிருந்து பைலைத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம். இந்த ஆப்ஷன் சேட் விண்டோவிலும் கிடைக்கும். இதனைப் பெறுபவர், இதில் காட்டப்படும் லிங்க்கில் கிளிக் செய்து பைலைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தலைகீழாக ஆங்கிலம்பேஸ்புக்கில் நாம் காணும், அல்லது அமைக்கும் ஆங்கில வாக்கியங்கள் அனைத்தும் தலைகீழாக இருந்தால் எப்படி இருக்கும்? இந்த கற்பனைக்கான விடையை, பேஸ்புக் தளத்தினை வடிவமைத்தவர்கள், ஓர் "ஈஸ்டர் எக்" ஆக அமைத்துள்ளனர். இதனைக் காண்பதற்கு, பேஸ்புக்கில் உங்கள் அக்கவுண்ட் தளத்தில் மொழி அமைப்பினை மாற்றி அமைக்க வேண்டும். உங்கள் தளத்தில், General Account Settings > Language எனச் செல்லவும். அங்கு ஏற்கனவே English (US) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்தால் கிடைக்கும் பட்டியலில், English upside down என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்துவிட்டால், உங்கள் பக்கத்தில் உள்ள ஆங்கில சொற்கள் அனைத்தும் தலைகீழாகத் தெரியும். ஒன்றை கவனத்தில் கொள்ளவும். இதனை எளிதாகப் படிக்க முடியாமல் எரிச்சல் அடைவோம். மாற்றிவிட்ட பின்னர், மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கையில், மெனுக்களில் உள்ள சொற்கள் அனைத்தும் தலைகீழாகத் தெரியும். கவனமாக அதனைக் கண்டு, மீண்டும் English US என்பதைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். இல்லையேல், நீங்கள் கம்ப்யூட்டர் முன்னால் தலைகீழாக சிரசாசனம் செய்து பேஸ்புக் தளத்தினைப் படிக்க வேண்டும். எப்படி வசதி?பேஸ்புக்கில் வலைமனை (Blog) வசதிபேஸ்புக் தளத்தில் நம் கருத்துகளைப் பதிவிடுகிறோம். சில படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வெளியிடுகிறோம்.
பேஸ்புக்கில்
உங்கள் இனிய நட்புஉங்களுடைய பேஸ்புக் இணைய நட்பு குறித்து அறிய
www.faceook.com/us என்ற முகவரியை டைப் செய்து காட்டப்படும் தளத்தினைப்
பாருங்கள். உங்கள் அனைத்து நண்பர்களின் புகைப்படங்கள், நீங்கள் வெளியிட்ட
புகைப்படங்கள் என அனைத்து நடவடிக்கைகளின் அடையாளம் கிடைக்கும். பின்னால்
பார்த்துக் கொள்ள காத்திடுசில வேளைகளில், பேஸ்புக்கில் நம் நண்பர்கள்,
முக்கியமான இணைய தளங்களை நாம் பார்க்க வேண்டும் என்பதற்காக, அதன் லிங்க்
அனுப்பி வைப்பார்கள். நமக்கு அப்போது நேரம் இல்லாததால், அப்புறம்
பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவைப்போம். ஆனால், லிங்க்கினை சேவ்
செய்திட மாட்டோம். இது போல "அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்" என்ற
விஷயங்களை, சேவ் செய்து வைத்துப் பின்னால் பார்க்க, பேஸ்புக் வழி அமைத்துத்
தருகிறது. இந்த டூலின் பெயர் "Save for Later". எந்தப் பதிவினையாவது
சேவ் செய்திட வேண்டும் என்றால், அந்தப் பதிவின் மேல் வலது முனையில் உள்ள
சின்ன அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில்
Save "[name of story]" என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இது, உங்களுடைய
சேவ் செய்யப்பட்ட போல்டருக்கு இந்த பதிவினை அனுப்பி சேவ் செய்திடும்.
"saved" என்ற பெயரில் ரிப்பன் ஒன்று காட்டப்படும். முதல் முதலாக ஏதேனும்
ஒரு பதிவினை சேவ் செய்த பின்னரே இந்த போல்டர் உருவாக்கப்படும். பின்னர்
அடுத்தடுத்து சேவ் செய்திடுகையில், அவை இங்கு வைக்கப்படும். அதில் கிளிக்
செய்தால், அனைத்து சேவ் செய்யப்பட்டவைகளையும் பார்க்கலாம். மொத்த பேஸ்புக்
செயல்பாடு பார்க்கநீங்கள் பேஸ்புக் தளத்தில் மேற்கொண்ட அனைத்து
செயல்பாடுகளையும், அதாவது "அனைத்தும்" மொத்தமாக பார்க்க விருப்பமா?
பேஸ்புக் அதற்கான வழியினைக் கொண்டுள்ளது.









