அரசு இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பதவிக்கான எழுத்து
தேர்வில், தேர்வர்கள், 'வாட்ச்' அணிந்து வர, அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.அரசு பொறியியல் கல்லுாரிகளில், பேராசிரியர் பதவிக்கு,
222 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கான எழுத்து தேர்வு, 11 மாவட்டங்களில் உள்ள, தேர்வு மையங்களில், வரும்,
22ல் நடக்கிறது. தேர்வு மையங்களை, டி.ஆர்.பி., அதிகாரிகளுடன், அரசு
இன்ஜி., கல்லுாரி மற்றும் அண்ணா பல்கலை அதிகாரிகள், நேரடியாக கண்காணிக்க
உள்ளனர்; போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.
எலக்ட்ரானிக் இல்லாத சாதாரண, 'வாட்ச்' அணிந்து வரலாம்; வேறு எந்த
பொருளையும் கொண்டு வரக்கூடாது. தேர்வில், 'அப்ஜெக்டிவ்' வினாக்கள்
இடம்பெறும்; விடைகளை குறியிட, கறுப்பு அல்லது நீல வண்ண, 'பால் பாயின்ட்'
பேனா பயன்படுத்த வேண்டும்.விடைத்தாளில், 'ஒயிட்னர்'
பயன்படுத்தக் கூடாது. தேர்வு மையத்துக்கு, காலை, 9:00 மணிக்கு மேல்
வருவோருக்கு, அனுமதி இல்லை என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.