சர்க்கரை நோயா? இனி கவலை வேண்டாம்!
இன்றைய நாகரிக உலகில் நிறைய பேருக்கு
சர்க்கரை இரத்த அழுத்த நோய் என்பது சகஜமானதாக இருக்கிறது. இவர்கள்
அதிலிருந்து மீள உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும்
அவசியம்.
சர்க்கரை இரத்த அழுத்த நோய்
உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட கலோரி அளவு கொண்ட உணவினை சாப்பிட
வேண்டுமென உணவு நிபுணர்கள் நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறார்கள். இந்த
சரிவிகித உணவு முறையினை சர்க்கரை அழுத்த நோய் உள்ளவர்கள் மட்டுமல்லாது
குடும்பத்திலுள்ள மற்றவர்களும் கூட பின்பற்றலாம். அதனால் ஆரோக்கியமான
வாழ்வு வாழ ஏதுவாகிறது.