தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே கீழஈராலில் அரசு உதவிபெறும் வேல்
வெள்ளைச்சாமி நாடார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 240 மாணவர்கள் படித்து
வருகின்றனர். இப்பள்ளியில் தினமும் 2 மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள
செடிகளுக்கு நீர் ஊற்றுவது வழக்கம். விடுமுறை தினமான நேற்று காலை 7.30
மணிக்கு கீழஈரால் அடுத்த து.அருணாசலபுரத்தை சேர்ந்த பெத்துராஜ் மகன் சூர்யா
(13), அதே ஊரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் சேர்மத்துரை (12) ஆகியோர்
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக சைக்கிளில் வந்தனர். சூர்யா 8ம்
வகுப்பும், சேர்மத்துரை 7ம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்கள்
இருவரிடமும் சாவியை பள்ளி நிர்வாகி சைலஸ் வழங்கி உள்ளார். பின்னர்
மாணவர்கள் பள்ளியை திறந்து வளாகத்தில் உள்ள செடிகளுக்கு தொட்டியிலிருந்து
தண்ணீர் ஊற்றி விட்டு சிறிது நேரம் கால்பந்து விளையாடியதாக தெரிகிறது.
அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் பந்து விழுந்துள்ளது. இதனை எடுக்க
2 மாணவர்களும் முயன்றுள்ளனர். அப்போது இருவரும் கிணற்றில் தவறி
விழுந்தனர்.
நீண்ட நேரமாகியும் சாவியை ஒப்படைக்க மாணவர்கள்
வராததால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகி சைலஸ், தலைமை ஆசிரியர் ஜெயபால்
வில்சன் ஆகியோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பள்ளி வளாகம்
முழுவதும் தேடியும் மாணவர்கள் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.
அவர்களின் சைக்கிள்கள் மட்டும் வளாகத்தில் இருந்தன. இதையடுத்து எட்டயபுரம்
போலீசார் மற்றும் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் வந்து மாணவர்களை தேடினர். அப்போது பள்ளி
வளாகத்தில் உள்ள கிணற்றில் மாணவர்கள் இருவரும் இறந்து கிடந்தது
தெரியவந்தது. இதையடுத்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில்
ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு இரவு 9.30 மணிக்கு இருவரது
உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர். சம்பவம் நடந்த பள்ளியை எட்டயபுரம் தாசில்தார்
பாக்கியலெட்சுமி, தொடக்க கல்வி அலுவலர் மாணிக்கம் ஆகியோர் பார்வையிட்டு
விசாரணை நடத்தினர். 10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
விடுமுறை நாளில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியபோது பள்ளி கிணற்றில் விழுந்து 2 மாணவர்கள் பலி: எட்டயபுரம் அருகே பரிதாபம்:
விடுமுறை நாளில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியபோது பள்ளி கிணற்றில் விழுந்து 2 மாணவர்கள் பலி: எட்டயபுரம் அருகே பரிதாபம்:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |