கடந்த, 2001ல், இரண்டாம் முறையாக, ஜெயலலிதா முதல்வர் பொறுப்பேற்றது
முதல், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பில் மிகப்பெரிய மாற்றம்
ஏற்பட்டது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்
மாவட்டங் களில் கோலோச்சிய பல ரவுடிகளும், கட்டப் பஞ்சாயத்து கும்பல்களும்,
வேறு மாநிலங் களுக்கு ஓடி விட்டனர் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை
மாறியது.
'என்கவுன்டரில்' ரவுடிகளை ஒழிப்பதும், ஆட்சி யையும், கட்சியையும் பயன்படுத்தி, கட்டப் பஞ்சாயத்து செய்வோர்களை கம்பி எண்ண வைப்பதும், ஜெயலலிதாவின் அசாத்திய துணிச்சலை காட்டக் கூடியதாக இருந்தது. கட்சியிலும் ஜெயலலிதாவின் கட்டளைகளை மீறியோ, அவரது கண் அசைவை தாண்டியோ, எவரும் எதையும் சாதித்தது இல்லை.
அ.தி.மு.க,வின் அமைச்சர்கள் முதல் அதிகாரி கள் வரை, ஜெயலலிதாவின் கட்டளைகளை, ராணுவ வீரர்கள் போல் கட்டுப்பாட்டுடன் 'என்கவுன்டரில்' ரவுடிகளை ஒழிப்பதும், ஆட்சி யையும், கட்சியையும் பயன்படுத்தி, கட்டப் பஞ்சாயத்து செய்வோர்களை கம்பி எண்ண வைப்பதும், ஜெயலலிதாவின் அசாத்திய துணிச்சலை காட்டக் கூடியதாக இருந்தது. கட்சியிலும் ஜெயலலிதாவின் கட்டளைகளை மீறியோ, அவரது கண் அசைவை தாண்டியோ, எவரும் எதையும் சாதித்தது இல்லை.
கடைபிடிப்பர் என்பது தான் வரலாறு. இந்நிலை யில், உடல்நிலை தளர்ந்து,
செப்., 22ல், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு
சேர்க்கப்பட்டார். பின், 75 நாட்களாக படுத்த படுக்கை யில், எந்தவித புகைப்
படமோ, வீடியோவோ வெளி யிடாமல், தமிழக ஆட்சியை கட்டுப்பாட்டுடன் நடத்தினார்.
கடந்த ஒரு வாரமாக, அவரைப் பற்றிய கவலையான தகவல்கள் வெளிவந்த நிலையில், ஜெயலலிதாவின் மரண செய்தி, திடீரென வந்தால் என்னவாகும்; சட்டம் - ஒழுங்கை எப்படி பாதுகாப்பது; தொண்டர் களை எப்படி கட்டுப்படுத்துவது; பொதுமக்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்றெல்லாம் பல எண்ணங்களும் கருத்துக்களும் பரவின.
ஆனால், தான் உயிருடன் இருக்கும் போது, எந்த அளவுக்கு கட்சியையும், ஆட்சியையும், ராணுவ கட்டுப்பாடு போல் வைத்திருந்தாரோ, அதே ராணுவ கட்டுப்பாட்டை, தன் அமைதியான மரணத்திலும் அவர் நிரூபித்திருக்கிறார். ஜெயலலிதா தலைமையி லான கட்சியை, 'ஒன்மேன் ஆர்மி' என்று சொல்வர்.
ஆட்சியை துவங்கியது முதல், தன் இறுதி ஊர்வலம் வரை, அந்தராணுவ கட்டுப்பாடு, தமிழகம் மட்டு மல்ல இந்திய மக்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி யுள்ளது. விஞ்ஞானி, அப்துல் கலாம் மறைந்த போது, பொதுமக்கள், தாங்களாகவே தங்கள் இயல்பு வாழ்க்கையை எப்படி மாற்றிக் கொண்டனரோ, அதே போன்ற சூழல் தான், ஜெயலலிதாவின் மறைவிலும் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைந்து விட்டார் என்ற செய்தி,

எந்த இடத்திலும் கலவரத்தை
ஏற்படுத்த வில்லை. கட்சியினர் பெயரில், யாரும் சாலை யில் இறங்கி,
வன்முறையில் ஈடுபட வில்லை. மாறாக, பொதுமக்களும், கட்சியினரும், தங்கள்
கவலைகளை அமைதியான முறையில் வெளிப்படுத்தினர்.
தேர்தல் மேடைகளில், ஜெயலலிதா முழங்கும் வார்த்தையான, 'தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் வைக்கப்படும்; வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்;
மக்கள் அமைதி யாக வாழ்வர்' என்பதை, ஆட்சி யில் இருந்த போது மட்டுமல்ல மறைந்த பின்னும் காப்பாற் றிய, 21ம் நுாற்றாண்டின் முதல் தலைவர் என்றே, தமிழகத்தின் இரும்பு பெண்மணி ஜெயலலிதாவை, மக்கள் பெருமையாக பார்க்கின்றனர்.