லோக்சபாவில், கேள்வி ஒன்றுக்கு, நிதித் துறை இணையமைச்சர், அர்ஜுன் ராம் மெக்வால், எழுத்து மூலம் அளித்த பதில்: மத்திய அரசின், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது; புதிதாக வெளியிடப்பட்ட, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளும் வரவேற்பை பெற்றுள்ளன. புதிய வடிவில், 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை வெளியிடவும், அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, புதிய வடிவில், 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள், விரைவில் அறிமுகப்படுத்தப்படும். செல்லாத நோட்டு அறிவிப்பால், மக்கள் கஷ்டத்தை போக்கும் வகையில், போதுமான பணத்தை, வங்கிகள், தபால் அலுவலகங்களுக்கு வழங்க, ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.