புதுடில்லியில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் கலந்து கொண்டு பேசும்போது, “500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் நாட்டில் ரூபாய்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 2017-ஜனவரி மாத மத்தியில் இந்த ரூபாய்தட்டுப்பாடு பிரச்சினை சரியாகிவிடும்” என்றார்.
பணமற்ற பரிவர்த்தனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக உள்ள வாய்ப்புகளை கண்டறியும் உயர்மட்டக் குழுவுக்கு அமிதாப் காந்த் தலைமை வகிக்கிறார். இந்தியாவில் 80 சதவீதம் மின்னணு பணப்பரிமாற்றத்தை உறுதி செய்யும் வகையிலான திட்டத்தை உருவாக்குவது, அமல்படுத்துவது, கண்காணிப்பது ஆகியவற்றுக்கான ஒரு திட்ட வரைவு தயாரிப்பதில் இக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.








