TNPSC:வருடாந்திர
தேர்வுக்கால அட்டவணையோடு நிற்கிறதுஅரசு பணியாளர் நியமனங்களுக்கான
அறிவிப்புகள்: போட்டித் தேர்வுக்கு படிக்கும் இளைஞர்கள் ஏமாற்றம்.
தொழிலாளர் அதிகாரி, சுற்றுலா அலுவலர், ஜெயிலர், குரூப்-2 அதிகாரிகள் என
பல்வேறு நேரடி நியமனங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படாமல் வெறு மனே
வருடாந்திர தேர்வு கால அட்ட வணையோடு நிற்பதால், போட்டித் தேர்வுகளுக்குப்
படித்து வரும் இளை ஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் எந்தெந்த அரசு பணிகளுக்கு என்னென்ன போட்டித் தேர்வுகள் எப்போது நடத்தப்படும், அதற் கான அறிவிப்புகள் எப்போது வெளியா கும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந் திர தேர்வுக்கால அட்டவணையை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் 2016-2017-ம் ஆண்டுக்கானஅட்டவணையும் வெளியிடப்பட்டது.ஆனால், அந்த அட்டவணையின்படி ஓரளவுக்காவது குறிப்பிட்ட தேதியில் நியமனம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு குறிப்பிட்ட காலத்தில் தேர்வு நடத்தாததால் போட்டித் தேர்வுக்குப் படித்து வரும் தமிழக இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொழிலாளர் அதிகாரி, சுற்றுலா அதிகாரி, ஜெயிலர் உட்பட பல்வேறு நேரடி நியமனங்களுக் கான அறிவிப்புகள், அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

டிஎன்பிஎஸ்சி
வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, தொழிலாளர் அலுவலர் நியமனத்துக்கான
அறிவிப்பு ஜூன் முதல் வாரத்திலும், சுற்றுலா அதிகாரி நியமனத்துக்கான
அறிவிப்பு ஜூலை முதல் வாரத்திலும், ஜெயிலர் பணிக்கான அறிவிப்பு பிப்ரவரி
கடைசி வாரத்திலும், குரூப்-2 பணிகளுக்கான அறிவிப்பு செப்டம்பர் முதல்
வாரத்திலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். தேர்வுக் கால அட்டவணையில்
அறிவிக்கப்படும் தேதி விவரம் தோராயமானது என்றா லும் பல மாதங்கள் ஆகிவிட்டதே
என்பது தான் தேர்வுக்குப் படிப்பவர்களின் ஆதங் கம். அதிலும் 2016-17-ம்
ஆண்டு அட்ட வணையில் இடம்பெற்ற நியமன அறி விப்புகள் இன்னும் வெளியிடப்படாத
நிலையில், 2017-18-ம்ஆண்டுக்கான தேர்வுக்கால அட்டவணையை தயாரிக் கும்
பணியில் டிஎன்பிஎஸ்சி இறங்கி யுள்ளது வேடிக்கை என்று தேர்வுக்கு படிக் கும்
பலர் கூறுகின்றனர். 2017-ம் ஆண்டுக் குரிய காலஅட்டவணை வரும் ஜனவரி மாதம்
வெளியிடப்பட வேண்டும்.
மத்திய அரசின் உயர் அதிகாரிகளை நேரடியாக
தேர்வுசெய்யும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமும் (யுபி எஸ்சி)
ஆண்டுதோறும் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை வெளி யிட்டு வருகிறது.
அட்டவணையின்படி, ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்பும் குறிப்பிட்ட
தேதியில்வெளியிடப்பட்டு குறிப்பிட்ட தேதியில் தேர்வும் நடத்தப்பட்டு,
குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவு களும் வெளியிடப்படுகின்றன. எனவே,
யுபிஎஸ்சி-யைப் போல் டிஎன்பிஎஸ்சி-யும் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை
யின்படி குறிப்பிட்ட தேதியில் தேர்வுகளுக் கான அறிவிப்புகளை வெளியிட்டு
தேர்வுகளை நடத்த வேண்டும் என்று போட்டித் தேர்வுகளுக்குப் படித்துவரும்
இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்.