தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான சம்பளம், மாத இறுதி நாளில், அவர்களது வங்கி கணக்கில், வரவு வைக்கப்படும். ஆனால், மார்ச் மாத சம்பளம் மட்டும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் முடிந்ததும், பட்ஜெட்டில் அறிவித்தபடி, பள்ளி கல்வித்துறை பணிகளுக்கு, நிதி ஒதுக்கப்படும். அதில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் ஒதுக்கி, அரசாணை பிறப்பிக்க வேண்டும். இந்த பணியானது, நிதித்துறையின் செலவின பிரிவில் மேற்கொள்ளப்படும்.








