அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கு நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்கள் பதவி காலியாக இருந்தது.
அண்ணா பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க மோகன், எபினேசர் ஜெயக்குமார், கருணா மூர்த்தி ஆகிய 3 பேர் பெயர் பரிசீலிக்கப்பட்டது. அவர்களிடம் கவர்னர் நேற்று நேர்காணல் நடத்தினார். ஆனால் கவர்னர் எதிர்பார்த்த அளவுக்கு அவர்களிடம் அதற்கான தகுதி இல்லை எனக் கருதி அந்த 3 பேரையும் தேர்வு செய்யாமல் விட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் புதிய குழு அமைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்








