பல் மருத்துவ கட்டணம் நிர்ணயம்
இந்த இடங்களுக்கான கவுன்சிலிங், இன்று நடைபெறுகிறது. இதற்கான கல்விக் கட்டணத்தை, மருத்துவக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அதில், மூன்று லட்சம் முதல், அதிகபட்சம், 13 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை பல் மருத்துவப் படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், நேற்று நடந்தது. அதில், அரசு கல்லுாரிகளில் உள்ள, எட்டு இடங்களும் நிரம்பின. சுயநிதிகல்லுாரிகளில் உள்ள, 110 இடங்களில், 105 இடங்கள் நிரம்பின.








