ஓர் ஆண்டு படித்து ஒப்பற்ற சாதனை !தொடர்ந்து 100% தேர்ச்சி !!! 6-மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்.

விழுப்புரம்
மாவட்டம் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலைப்
பள்ளி தெங்கியாநத்தம்.இப் பள்ளி 2011-2012ஆம் கல்வி ஆண்டில் புதியதாக தரம்
உயர்த்தப்பட்ட பள்ளி ஆகும்.2016-2017ஆம் கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்பு
பொதுத் தேர்வில் இப்பள்ளியில் இருந்து 48மாணவர்கள் தேர்வு
எழுதினர்,இவர்களில் 48 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.மற்றும் முதல்
மதிப்பெண் 461 மதிப்பெண்களை சாந்தினி என்ற மாணவி பெற்றுள்ளார்.18மாணவர்கள் 400க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
பெற்றுள்ளனர்.6 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் இந்த சாதனையை பாராட்டி தலைமை ஆசிரியர் திரு.கா.மணி மற்றும்
ஆசிரியர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ஆஞ்சாலோ இருதயசாமி மற்றும் முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சா.மார்ஸ் மற்றும்
மாவட்டக்
கல்வி அலுவலர் திருமதி கோ.தனமணி அவர்கள் பாராட்டுக்களையும்
வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.அரசுப் பள்ளியில் இது போன்ற நிகழ்வுகள் அபூர்வம் ஆனால்
இனி இது
சாத்தியம்.அரசு பள்ளி ஆசிரியர்கள் என்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு
இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு அதை மெய்பிக்கும் வகையில்
உள்ளது.இப் பள்ளி தொடந்து 100%தேர்ச்சி பெற கல்விக்குரல் மனதார
வாழ்த்துகிறது.