- நாய் நன்றி உள்ளது.
- நாய் வீட்டைக் காக்கும்.
- நாய் அன்பானது... இப்படி நிறைய நல்ல விசயங்கள் நாயிடம் இருக்கிறது.
ஆனால் நாயிடம் ஒரே ஒரு கெட்டப்பழக்கமும் இருக்கிறது. அது என்ன வென்றால்... நாய் தான் உண்ட உணவு அதற்கு மிகவும் பிடித்திருந்தால் அதைத் திரும்பவும் வெளியே கக்கி (வாந்தி எடுத்து) திரும்பவும் அதே உணவை ரசித்துச் சுவைத்து உண்ணும். இப்படி செய்வது நம் யாருக்கும் பிடிக்க வில்லையென்றாலும் இதுவும் நாயின் குணங்களில் ஒன்றே.
அதே போல, தான் அனுபவித்த இன்பங்களை மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு தங்களின் நாற்பது வயதிற்கு மேல் மனிதர்களுக்குத் தோன்றுமாம். அப்படி கிடைக்காத பச்சத்தில் அவர்கள் கொஞ்சம் கோபத்துடனும் சிடுசிடுப்பாகவும் இருப்பார்களாம்.
அதனால் தான் மனிதனுக்கு “நாற்பது வயதில் நாய் குணம்“ வரும் என்று பழமொழியாக வழங்கப்படுகிறது.
இப்படி எந்தத் தவறான எண்ணமும் வராமல் ஒருசிலர் இருக்கலாம். அவர்கள் தெய்வகுணம் நிரம்பியவர்கள் என்றே நாம் எண்ண வேண்டும்
 









 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
