புதுச்சேரி சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், மத்திய அரசின் ஒன்றியப் பகுதியாக வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது. முன்பு இந்த நகரம் பிரெஞ்சு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.
புதுச்சேரி, ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.
அதனால் இங்குள்ள அடித்தட்டு மக்களும் பிரெஞ்சுச் சொற்களை, மிகச் சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர்.
ஆகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையினராக இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
பாண்டிச்சேரிக்கு முன்பு புதுச்சேரி என்றுதான் பெயர் இருந்தது. பிரெஞ்சுகாரர்கள் பாண்டிச்சேரியை தங்கள் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்து 130 வருடங்கள் ஆண்டனர்.
பிரெஞ்சு மொழியில் புதுச்சேரி என்பதை அவர்களால் சரியாக உச்சரிக்க முடியவில்லை. எனவே அவர்கள் பாண்டிச்சேரி என்று மாற்றி உச்சரித்தனர்.
பின்னர் அது பாண்டிச்சேரி என்றே முழுமையாக மாறி விட்டது. அலுவல் நடைமுறையிலும் பாண்டிச்சேரி என்றாகி விட்டது.
பாண்டிச்சேரியை புதுச்சேரி என மீண்டும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தமிழ் அமைப்புகள் போராடி வந்தன. சட்டசபையிலும் கூட தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மெட்ராஸ் சென்னை எனவும், பம்பாய் மும்பை எனவும், கல்கத்தா கொல்கத்தா எனவும் சமீபத்தில் பெங்களூர் பெங்களூரு எனவும் பெயர் மாற்றப்பட்டன.
இந்த பெயர் மாற்றத்தை அந்தந்த மாநில அரசுகளே சட்டசபையில் சட்ட மசோதா கொண்டு வந்து மாற்றி கொண்டன.
ஆனால் பாண்டிச்சேரி மத்திய அரசின் நேரடி பார்வையில் உள்ள னினியன் பிரதேசம் என்பதால் சட்டசபையில் மசோதா கொண்டு வந்து பெயர் மாற்ற முடியாது.
இதற்கு பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்தது.
பாராளுமன்ற கூட்டத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டு பாண்டிச்சேரி புதுச்சேரி என மாற்றப்பட்டது.








