2022ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள சுமார் 40 கோடிப் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கும் இலக்குடன் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஜூலை 15ஆம் தேதி தொடங்கப்பட்ட திட்டந்தான் ‘ஸ்கில் இந்தியா’. இத்திட்டத்தை மக்களிடையே பிரபலப்படுத்தும் வகையிலும், திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கிலும் அரசு சார்பில் ஸ்கில் இந்தியா விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சக உயரதிகாரி ஒருவர், “சினிமா விளையாட்டு போன்ற துறைகளில் பிரபலமானவர்களுக்குப் பதிலாக வெற்றியடைந்த சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை ஸ்கில் இந்தியா விளம்பரங்களில் மிகைப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.








