கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கொளவல்லம்
பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் ஸ்ரீதுராஜ் (வயது 23). அரசு பள்ளி
ஆசிரியை. கேரள அரசு ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடத்தியது. அதில்
ஆசிரியை ஸ்ரீதுராஜூம் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்.
கடந்த வாரம்
தேர்வு முடிவுகள் வெளியானது. ஸ்ரீதுராஜ் ஓ.பி.எஸ். பிரிவை சேர்ந்தவர். 82
மதிப்பெண்கள் பெற்றால் ஆசிரியைக்கு தகுதி பெற்று விடுவார். ஆனால் அவர் 81
மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். 1 மதிப்பெண் கிடைக்கவில்லை. இதனால்
ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வி அடைந்தார்.
ஆசிரியர் தேர்வில் 1
மார்க் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை எண்ணி ஸ்ரீதுராஜ் மன உளைச்சலுக்கு
ஆளானார். விரக்தியில் இருந்த ஆசிரியை நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத
நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த
தகவல் அறிந்ததும் கண்ணூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீதுராஜூன்
உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகிறார்கள்.