பால. ரமேஷ்.
தினம் ஒரு தகவல்.
உடலை அறிந்து கொள்வோம் பாகம் - 25
* எப்போது உண்ணலாம்?
"பசித்துப் புசி" என்கிறது பழமொழி,
பசிக்கும் போது உண்ணலாம்.
* எப்படி உண்ண வேண்டும்?
"நொறுங்கத் தின்றால் நூறு வயது" என்கிறது பழமொழி.
நொறுங்கத் தின்பது செரிமானத்தை எளிதாக்கும். சிறிய சிறிய கவளங்களாக உணவை வாயிலிடும்போதே நன்றாக மென்று அரைத்துக் கூழாக்கி விழுங்க வேண்டும். ஏனென்றால் இரைப்பையில் உணவை கூழாக்கவோ நொறுக்கவோ முடியாது. இரைப்பைக்கு பற்கள் கிடையாதுதானே! உணவின் ருசி மாறும் அளவிற்கு மென்று விழுங்கினால் அடுத்தடுத்த செரிமான இயக்கங்கள் மிக வேகமாக எளிதாக நடைபெற வழிவகுக்கும்.

உணவில் பாகுபாடு கிடையாது. எதை நீங்கள் விரும்புகிறீர்களோ அதை உண்ணலாம். பசிக்கும் போது நீங்கள் உண்ணும் உணவு எதுவாக இருந்தாலும் அதனை செரித்து ஆற்றலை பிரித்தெடுப்பதுதான் உடலின் வேலை. உணவுப் பொருள்கள் எதையுமே உடல் நிராகரிப்பதில்லை.
"பசியோடு அமர்ந்து - பசியோடு எழுங்கள்"
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
நாம் உண்ணும் உணவு பசியை முழுதாகப் போக்கக் கூடாது. வயிறு முட்ட கனமான உணர்வு வரும் வரை உண்ணக்கூடாது. வயிறு கனமாகும் முன்பே பசி மிதமாக மாறும். "போதும்" என்ற உணர்வும் மேலோங்கும். நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவின் சுவை மெதுவாக குறையத் தொடங்கும். இதுவே பசியாறுதலாகும். இதுவே நாம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டிய நேரமாகும்.
நாம் உண்ட உணவு உடலின் சக்தி குறைவை நீக்கி புத்துணர்ச்சி பெற போதுமானதாகும். இந்த அளவை நாம் மீறும் போது வயிறு கனமாகி புத்துணர்ச்சிக்குப் பதிலாக சோர்வும், தூக்கமும் ஏற்படும். அளவை மீறிய உணவு உடலிற்கு தேவையற்றது. கஷ்டம் தருவதுமாகும்.உணவை சாப்பிடுவது பசி இருக்கும் போது அளவாக இருக்க வேண்டும். இந்த உணவு முறை ஒழுங்கு முறைப்படுத்தப் பட்டால் கழிவுகள் புதிதாக தேங்காது. ஏற்கனவே தேக்கமடைந்த கழிவுகளை உடல் வெளியேற்றத் துணையாகவும் இருக்கும்.
"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு!"