நியூயார்க்:
சமூக ஊடகங்களில் உண்மை செய்திகளை விட பொய்யான செய்திகளே மிக விரைவாக பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஆராய்ச்சி செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதற்காக 2016-17 ஆண்டு வரை 1,26,000 பேரின் டுவிட்கள் கண்காணிக்கப்பட்டன. அந்த அறிக்கையில்,
மக்கள் உண்மையான செய்தியை விட பொய்யான செய்தியை அதிகமாக நம்புகின்றனர். இதனால் அவர்கள் பொய்யான செய்தியை சமூக ஊடகங்களில் மிக விரைவாக பகிர்கின்றனர். ஒரு உண்மையான செய்தி பகிரப்படும் நேரத்தில் 6 பொய்யான செய்திகள் பரவிவிடுகின்றன. உண்மையை விட பொய் செய்திகள் 70 சதவீதம் அதிகமாக பகிரப்படுகின்றன.
இதற்கு முக்கிய காரணம் மக்கள் புதிய மற்றும் வித்தியாசமாக செய்திகளை விரும்புகின்றனர். பொய்யான செய்திகள் அவர்களின் ஆவலை தூண்டுகின்றன. அதனால் வருகின்ற செய்தி உண்மையா, பொய்யா என்பதை ஆராயாமல் அதனை பகிர்ந்து விடுகின்றனர். இது போன்ற பொய்யான செய்திகள் நாட்டில் முக்கிய நிகழ்வுகள் குறிப்பாக தேர்தல் நடைபெறும் வெளிவருகின்றன.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது போன்ற பொய்யான செய்திகள் பரவுவதை தடுக்க டுவிட்டர் நிறுவனம் புதிய விதிமுறைகளை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. #fakenews #socialmedia #tamilnews thanks to maalaimalar.