'அரசு துறைகளை ஒப்பந்தமயமாக்கும் அரசாணையை, திரும்ப பெற
வலியுறுத்தி, அனைத்து தாலுகா தலைநகரங்களிலும், நாளை கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெறும்' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து, சங்கத்தின் பொதுச் செயலர், அன்பரசு விடுத்துள்ள
அறிக்கை:அரசின் செலவுகளை குறைக்க, அரசு துறைகளில் உள்ள, தேவையற்ற
பணியிடங்களைக் கண்டறிந்து, அவற்றில் ஒப்பந்த அடிப்படையில், ஆட்களை
நியமிக்க, பணியாளர் சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதை, இப்போதே
எதிர்க்காவிட்டால், ஏற்கனவே காலியாக விடப்பட்டுள்ள, மூன்றரை லட்சம்
பணியிடங்கள் நிரப்பப்படாது.வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து
காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலமும், தேர்வாணைய தேர்வுக்கு தயாராகும்
மாணவர்களின் எதிர்காலமும், குழிதோண்டி புதைக்கப்பட்டு விடும்.
எனவே, பணியாளர் சீரமைப்பு குழு நியமன அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி,
தமிழகம் முழுவதும், அனைத்து தாலுகா தலைநகரங்களிலும், நாளை கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.