அதன் விபரம்: * தமிழக ஒதுக்கீட்டு இடங்களுக்கான, கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள், 'தமிழர்' என, இடம் கோரமுடியாது
* தமிழகத்தில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்த மாணவர்கள், இருப்பிட சான்றிதழ் சமர்பிக்க வேண்டாம். ஆனால், தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, வேறு மாநிலங்களில் படித்திருந்தால், கட்டாயம் இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்
* அந்த மாணவரின் பெற்றோர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிவிக்க, அவர்களது பிறப்பு சான்றிதழ், 10ம் வகுப்பு சான்றிதழ்,பிளஸ் 2 சான்றிதழ், டிப்ளமா அல்லது இளநிலை கல்வி பெற்றதற்கான சான்றிதழ், குடும்ப அட்டை போன்றவற்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்கள், பொது பிரிவினருக்கான பட்டியலில் தான் இடம் பெறுவர்.
* வேறு மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்து, தமிழகத்தில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்திருந்தால், நீட் தேர்வுக்கான விண்ணப்பத் தில், தமிழகத்தை சொந்த மாநிலமாக குறிப் பிட்டாலும், அவர்கள், பொது பிரிவினருக்கான பட்டியலில் தான் இடம் பெறுவர்
* போலியான சான்றிதழ்கள் கொடுத்து, படிப் பில் சேர்ந்தது தெரிய வந்தால், மாணவர்கள், கல்லுாரிகளில் இருந்து உடனே நீக்கப்படுவர். மேலும், மாணவர் மீதும், பெற்றோர் மீதும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.








