ஆசிரியர்களின் உடலில் சிறிய எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்படும்.
நாம் என்ன செய்கிறோம் என்ற தகவல்களை உடனுக்குடன் சர்வருக்கு அனுப்பி கொண்டே இருக்கும்..
அத்துடன் அந்த சிப்பானது Google maps உடன் இணைக்கப்பட்டு இருக்கும்..
அதில் எப்பொழுது வருகிறோம்
போகிறோம் என்ற தகவல்களை சேகரிக்கும்..
QR code TLM பயன்படுத்துகிறீர்களா என்ற தகவலை அனுப்பும்..
மருத்துவ விடுப்பு உங்களுக்கு தேவையா என்று அதுவே உங்கள் உடலை Scan செய்து ரிப்போர்ட் செய்யும்..
செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பிய Curiosity Rover விண்கலத்தில் இருக்கும் அதிநவீன கேமரா நம்மை படம்பிடித்து கொண்டே இருக்கும்..
படிக்கும்போது வயிறு கலக்குதா..
இப்படித்தான் நம்ம ஆசிரியர்கள் அதிரடி., அதிரடினு Forward மெசேஜா அனுப்பும்போது எனக்கும் கலக்கியது ..
90% ஆசிரியர்கள் தம் பணியை சரியாக செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்..
நாம் நம் வேலையை சரியா செய்யும் போது எந்த Google map ற்கும் அச்சம்கொள்ள தேவையில்லை..
பதற்றம் வேண்டாம்..
மற்றவைரையும் பதற்றபட வைக்கவேண்டாம் நண்பர்களே. .
நாம் எல்லோரும் மீடியாவிற்கு தெரியாத பகவான்களே..









