இந்தியா என்பது பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கலந்த ஒரு நாடு.
இங்கு பல பண்டிகைகள் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப சிறப்பாக கொண்டாடப்பட்டு
வருகிறது. ஆனால் ஒருசில பண்டிகைகள் மட்டுமே இந்தியா முழுவதும்
கோலாகலத்துடன் கொண்டாப்படுகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் விநாயகர்
சதுர்த்தி. வட இந்தியாவில் கணேஷ் சதுர்த்தி என்று கொண்டாடப்படும் இந்த விழா
அவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.
ஜெயமாகும் என்பது நம் நாட்டில் நிலவும் பரவலான நம்பிக்கையாகும். விநாயகரை
தினமும் வழிபட்டாலும், விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுவது கூடுதல்
சிறப்பாகும்.
பூஜைக்கு தேவையானவை
பூஜைக்கு தேவையானவை
விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைக்கு தேவையானவை விநாயகர் சிலை,
மல்லிகை,தாமரை மற்றும் எருக்க மலர், சிவப்பு சந்தனம், பழங்கள், வெற்றிலை,
அருகம்புல், கொழுக்கட்டை, தேங்காய், கற்பூரம், நெய்விளக்கு, உணவு. இவை
அனைத்தும் பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தவை ஆகும். இவை அனைத்தையும் வைத்து
பின்வரும் முறையில் பூஜை செய்து வழிபட்டால் சகல செல்வங்களும் உங்களுக்கு
கிடைக்கும்.
வீட்டை சுத்தப்படுத்துங்கள்
கோலம்
வீட்டு வாசலில் கோலம் போடுங்கள். அரிசி மாவு கோலமாக இருந்தால் கூடுதல்
சிறப்பு. கலர் பொடிகளை உபயோகப்படுத்தியும் போடலாம். இது உங்கள்
இல்லத்திற்குள் நேர்மறை சக்திகளை கொண்டுவர உதவியாய் இருக்கும்.
பிள்ளையார் சிலை
பிள்ளையார் சிலை
விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே பல வகையான விநாயகர்
சிலைகள் கடைகள் விற்க தொடங்கிவிடும். அதில் உங்கள் மனம் கவர்ந்த ஒரு சிலையை
வாங்கி பூஜையறையில் வைக்கவும். இது அந்த கணேசனே உங்கள் வீட்டுக்கு வருவது
போலாகும். பிள்ளையார் சிலைக்கு பட்டாடை உடுத்துங்கள். விநாயருக்கு முன்
அவருக்கு பிடித்த அருகம்புல், கொழுக்கட்டை, வெற்றிலை போன்றவற்றை படைத்து
அவர் விரும்பும் எருக்கம் பூ மாலையையும் அணிவிக்கவும். பின்னர் இரண்டு நெய்
விளக்குகளை அவருக்கு முன் ஏற்றி வைக்கவும்.
மந்திரங்கள்
விநாயகர் மிகவும் அன்பான கடவுளாவார். அவரை வழிபட அதிக சிரமபட தேவையில்லை.
அவரை வணங்க தூய மனமும், " ஓம் கம் கணபதியே " என்னும் எளிய மந்திரமே போதும்.
இந்த மந்திரத்தை மனதார விநாயகரை நினைத்து கூறினாலே உங்களுக்கு வெற்றிகளை
அள்ளி தருவார் பிள்ளையார்.
உணவு
உணவு
பிள்ளையார் ஒரு உணவுப்பிரியர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவருக்கு
மிகவும் பிடித்த கொழுக்கட்டை பூஜையில் இருக்க வேண்டியது அவசியம். அது
மட்டுமின்றி தேங்காய், சுண்டல், வெல்லம் லட்டு போன்றவையும் வைத்து
வழிபடலாம். பூஜை முடிந்த பின் இவற்றை பிரசாதமாக கொடுங்கள்.
தீபாராதனை
தீபாராதனை
படையல் இட்டு முடிந்த பிறகு தீபாராதனை காட்டும் போது மணியோசை எழுப்புங்கள்.
இது பிள்ளையாருக்குக் மிகவும் பிடித்த ஒன்றாகும். இது உங்கள் வீட்டில்
உள்ள தீயசக்திகளை விரட்டியடிக்கும்.
நீரில் விடுதல்
நீரில் விடுதல்
பூஜையெல்லாம் முடிந்து அனைவருக்கும் பிரசாதம் கொடுத்தவுடன் பிள்ளயாரை
கடலிலோ அல்லது ஆற்றிலோ விட வேண்டியது அவசியம். அவ்வாறு நீரில் விடும்போது
அந்த சிலையுடன் சில நாணயங்களையும், மலர்களையும் சேர்த்து விடவேண்டியது
அவசியம். இது நமது துன்பங்களை அவரிடம் ஒப்படைத்து விடுவதாகவும், அந்த
துன்பங்களை அவர் தன் துன்பமாக எண்ணி நீக்கிவிடுவார் என்றும்
நம்பப்படுகிறது.








