பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.15 கோடியில் நவீன பள்ளி - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Breaking News

Post Top Ad

Friday, 9 November 2018

பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.15 கோடியில் நவீன பள்ளி

ஊட்டி அருகே, 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியின மாணவர்களுக்காக, நவீன உண்டு உறைவிடப்பள்ளி கட்டப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்தில், பழங்குடியின மக்களின் குழந்தைகள் தரமான கல்வி பெற்று வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி கோடப்பமந்து பகுதியில், 'ஏகலைவா பழங்குடியினர் மாதிரி பள்ளி' கடந்த சில ஆண்டுகளுக்கு முன், துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊட்டி அடுத்துள்ள முத்தோரை பாலாடாவில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மைய வளாகத்தில், ஆறாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் வகையில், நவீன வசதிகளுடன் உண்டு உறைவிடப்பள்ளி கட்டட பணிகள் நடந்து வருகின்றன.பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குனர் சுப்ரமணியம் கூறுகையில், ''முத்தோரை பாலாடாவில் உள்ள ஆராய்ச்சி மைய வளாகத்தில், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கான உண்டு உறைவிட பள்ளி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பழங்குடியின மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரமான கல்வி பெற முடியும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad