திறனாய்வு தேர்வில் கணிதம் கடினம்: கோவை மண் குறித்தும் கேள்வி : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Breaking News

Post Top Ad

Monday, 5 November 2018

திறனாய்வு தேர்வில் கணிதம் கடினம்: கோவை மண் குறித்தும் கேள்வி :

மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வில், கணிதம் பாட கேள்விகள், கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் சார்பில், (என்.சி.இ.ஆர்.டி.,) பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு தேசிய திறனாய்வு தேர்வு, இரண்டு கட்டங்களாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தேர்வு, தமிழகத்தில் நேற்று நடந்தது.அறிவுத்திறன் தேர்வு இரண்டு மணி நேரமும், கல்வி திறன் தேர்வு இரண்டு மணி நேரமும் நடந்தது.அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், தேர்வுக்கு பதிவு செய்த, 177 பேரில், 167 பேர் தேர்வு எழுதினர். எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பதிவு செய்த, 225 பேரில், 158 பேர் மட்டும் தேர்வு எழுதினர்.
தேர்வில், 200 கேள்விகள், அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்பட்டிருந்தது. அதில் கோயம்புத்துாரின் மண் வகை யாது? என்னும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது.இந்த தேர்வில், 80 சதவீதம் மதிப்பெண் பெறுவோர், இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதி பெறுவர். இரண்டாம் கட்ட தேர்விலும் வெற்றி பெற்றால், பிளஸ்1, பிளஸ்2 படிக்கும் போது மாதம் 1,250 ரூபாயும், பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும்போது மாதம் 2,000 ரூபாயும் மத்திய அரசு தருகிறது.தேர்வு குறித்து மாணவ, மாணவியர் கூறுகையில், 'கணிதம் பாடத்திலிருந்து இதில், 20 மதிப்பெண்களுக்கும், அறிவுத்திறன் தேர்வில், 30 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது; கடினமாக இருந்தது. 75 சதவீத கேள்விகள் பாடத்திலிருந்தும், 25 சதவீதம் பொதுவாகவும் கேட்கப்பட்டிருந்தன' என்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad