கல்வியில் பின்தங்கியுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்:கலெக்டர் சுப்ரமணியன் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Breaking News

Post Top Ad

Wednesday, 7 November 2018

கல்வியில் பின்தங்கியுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்:கலெக்டர் சுப்ரமணியன் :

கல்வியில் பின்தங்கியுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்' என கலெக்டர் சுப்ரமணியன் பேசினார்
கள்ளக்குறிச்சியில் நடந்த அனைத்து நிலை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது
கல்வியில் பின்தங்கியுள்ள விழுப்புரத்தை வரும் கல்வியாண்டில் சிறந்த மாவட்டமாக நிரூபிக்க வேண்டும். மற்ற மாவட்டங்களைவிட கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டம் சிறந்து விளங்குகிறது.

மாணவர்களை சிறப்பாக வழிநடத்தி கல்வி போதித்தால் சிறந்து விளங்க முடியும். அதற்கான பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது

மாணவர்கள் முன்னேற ஆசிரியர்கள் பாதை அமைத்து தர வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு அதிகளவில் வர துவங்கியுள்ளனர். ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வரவேண்டும்.பள்ளி சிறந்து விளங்க தலைமையாசிரியர் பங்கு மிக முக்கியமானது

ஆசிரியர்களை தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்த வேண்டும். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்று தர வேண்டும்.கல்வியில் விழுப்புரம் மாவட்டம் கடைசி என்பதை மாற்ற வேண்டும்

வரும் கல்வியாண்டில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் உயருவதற்கு அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பள்ளிகல்வி மற்றும் மருத்துவ துறையில் விழுப்புரம் மாவட்டம் சிறந்து விளங்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad