சிவகங்கை: சிவகங்கையில், மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்த
சம்பவத்தையடுத்து, பள்ளி மாடிகளில் கம்பிவேலி அமைக்க கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கையில் வெவ்வேறு தனியார் பள்ளிகளில் அடுத்தடுத்து இரண்டு மாணவியர்
மாடியில் இருந்து குதித்தனர்.ஒரு மாணவி இறந்தார்; மற்றொரு மாணவி மதுரை
மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இச்சம்பவங்களால் கல்வித்துறை
அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து 'மாடிகளில் இருந்து கீழே
குதிக்க முடியாதபடி உடனடியாக கம்பிவேலி அமைக்க வேண்டும்; மொட்டை மாடிக்குச்
செல்ல முடியாதபடி கதவை பூட்ட வேண்டும்' என, உத்தரவிட்டனர்.
மேலும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு மாணவர்களை வழிநடத்துவது குறித்து
கவுன்சிலிங் நடத்தவும் முடிவு செய்தனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர்
கூறியதாவது:தவறு செய்தாலும் மாணவர்களை அவமானப்படுத்தும் விதமாக எச்சரிக்க
கூடாது என, ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளோம். பாதுகாப்பு நடவடிக்கைகளை
புகைப்படம் எடுத்து அனுப்பவும் உத்தரவிட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.