'லோக்சபா தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், சமூக வலைதளங்களில்,
தேர்தல் விளம்பரங்கள் வெளியாவதற்கு, கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்' என
கூறி, தேர்தல் கமிஷனுக்கு, தொண்டு நிறுவனம், வழக்கறிஞர் மூலம், 'நோட்டீஸ்'
அனுப்பிஉள்ளது.
லோக்சபாவுக்கு, ஏப்ரல், மே மாதங்களில், தேர்தல் நடக்க உள்ளது. தற்போது, தேர்தல் பிரசாரங்களுக்கு, 'பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களை, பலர் அதிகம் பயன்படுத்து கின்றனர்.சில அரசியல் கட்சிகள், இதை முறைகேடாக பயன்படுத்துவதாக, புகார்கள் வந்துள்ளன.
'சமூக
வலைதளங்களில் பொய் செய்திகள், சட்ட விரோத செய்திகளை பரப்புவோர் மீது, கடும்
நடவடிக்கை எடுக்கப் படும்' என, மத்திய அரசு, ஏற்கனவே எச்சரித்து உள்ளது.
இதற்காக, தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யவும், ஆலோசித்து
வருகிறது.'தவறாக பயன்படுத்துவோரின் கணக்கை முடக்கு வோம்' என, வாட்ஸ் ஆப்
நிறுவனமும் எச்சரித்து உள்ளது.இந்நிலையில்,'பொறுப்புடைமை மற்றும் அமைப்பு
ரீதியில் மாற்றம்' என்ற தொண்டு நிறுவனம், தேர்தல் கமிஷனுக்கு, வழக்கறிஞர்
மூலம் அனுப்பியுள்ள, நோட்டீசில் கூறியிருப்பதாவது: லோக்சபாவுக்கு, ஏப்ரல், மே மாதங்களில், தேர்தல் நடக்க உள்ளது. தற்போது, தேர்தல் பிரசாரங்களுக்கு, 'பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களை, பலர் அதிகம் பயன்படுத்து கின்றனர்.சில அரசியல் கட்சிகள், இதை முறைகேடாக பயன்படுத்துவதாக, புகார்கள் வந்துள்ளன.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சமூக வலைதள நிறுவனங்களுக்கும், சில கட்டுப் பாடுகளை, தேர்தல் கமிஷன் விதிக்க வேண்டும்.சமூக வலைதளங்களில் வெளியாகும், தேர்தல் தொடர்பான விளம்பரங்களை, தேர்தல் கமிஷன் ஆய்வு செய்ய வேண்டும். இல்லாவிடில், நாங்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.தேர்தல் நடத்தை விதிகளை, சமூக வலைதள நிறுவனங்களுக்கும் கட்டாயமாக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.