சென்னை:அரசு கல்லுாரிகளில், தற்காலிக விரிவுரையாளர்களாக, 500 பேரை நியமிப்பதில், முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள, நுாற்றுக்கும் மேற்பட்ட, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2,000க்கும் மேற்பட்ட, தற்காலிக விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த ஆசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், புதிதாக, 500 தற்காலிக விரிவுரையாளர்களை நியமிக்க, கல்லுாரி கல்வி இயக்குனரகத்துக்கு, உயர்கல்வி துறை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, விரிவுரையாளர் தேவைப்படும் கல்லுாரிகளில், அந்தந்த கல்லுாரி முதல்வர்களே ஆட்களை நியமித்துக் கொள்ள, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. ஆனால், இதில் முறைகேடு நடப்பதாக, புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, 'நெட், செட்' முடித்த, முதுநிலை பட்டதாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:அரசு கல்லுாரிகளில், 500 காலியிடங்களை நிரப்ப, கல்லுாரி கல்வி இயக்குனரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதில், கல்லுாரி முதல்வர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின் பரிந்துரை சீட்டு உள்ளவர்களுக்கே, பணி தரப்படுகிறது.
முதல்வர்கள் சுயமாக நியமிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இந்த வேலைக்கு, சில இடைத்தரகர்கள், 5 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசுகின்றனர். எனவே, உயர்கல்வி துறை, தற்காலிக பணி நியமனத்தை நிறுத்த வேண்டும். முறையான அறிவிப்பு செய்து, விண்ணப்பங்களை பெற்று, ஆட்களை நியமிக்க வேண்டும். கல்வி தகுதிகளை ஆய்வு செய்யாமல், தற்காலிக நியமனம் செய்யக் கூடாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.