பொருளாதாரம் குறித்த பாடத்தை 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு
பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் முன்னாள் மத்திய நிதியமைச்சர்
ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இவர் எழுதிய, "UNDAUNTED" SAVING THE IDEA OF INDIA என்ற புத்தக வெளியீட்டு
விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பார்வையாளர்கள் மற்றும்
சிறப்பு விருந்தினர்களின் கேள்விகளுக்கு ப.சிதம்பரம் பதிலளித்தார்.
அப்போது, பேசிய அவர், 21ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த அறம் என்பது, வறுமை
கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு குறைந்தபட்ச வருமானம் வழங்குவதுதான்
என்றார்.