ராமநாதபுரம்:தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜன.,1 முதல் அகவிலைப்படி உயர்வை
தற்போது வரை அறிவிக்காததால் அதை எதிர்பார்த்து ஊழியர்கள்
காத்திருக்கின்றனர்.தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜன., 1 முதல் ஒரு அகவிலைப்படி அறிவிப்பும், ஜூலை முதல் தேதியில் இருந்து மற்றொரு அறிவிப்பு என ஆண்டுக்கு இரு அகவிலைப்படி அறிவிக்கப்படும். 12 சதவீதம் வரை அகவிலைப்படி வழங்கப்படும்.மத்திய அரசு கடந்த பிப்., மாதம் 2019 ஜன., மாதத்திற்குரிய அறிவிப்பையும், புதுச்சேரி மாநில அரசு 2019 ஜன., மாதத்திற்கான அகவிலைப்படியையும் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு மட்டும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கவில்லை. இது வழக்கமான அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பு என்பதால் இதனை தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்படுத்தாது.
இன்று வரை தமிழக அரசு அறிவிப்பு வெளியிடாததால் அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அகவிலைப்படி அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றால் அதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும், என அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.








