
பொம்மை என்பது பெரியவர்களுக்குத்தான்
உயிரற்ற ஒரு விளையாட்டு பொருள். ஆனால், குழந்தைகளைப் பொறுத்தவரை அதுவும்
ஓர் உறவுதான். அதனோடு பேசுவது, விளையாடுவது, தான் சாப்பிடும் உணவை அதற்கு
ஊட்டுவது, குளிப்பாட்டுவது, அழகுபடுத்துவது எனபொம்மையைச் சுற்றியே
அவர்களின் உலகமும் இயங்கும். பெரியவர்கள் சமயங்களில் அலட்சியமாக பொம்மையைக்
கையாண்டால்கூட குழந்தையின் முகமே வாடிவிடும். குறிப்பிட்ட வயதை அடையும்
வரையிலுமே குழந்தைகளுக்கு பொம்மைகள் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட
பொம்மைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.