
கோதுமை மாவு - 1 கப்,
உப்பு - சிறிது,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
தண்ணீர் - 3 கப்.

செய்முறை :
கோதுமை மாவில் அரை கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.
அடிகனமான கடாயில் 2 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
கொதிக்கும் தண்ணீரில் எண்ணெயும் சிறிது உப்பும் சேர்க்கவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கரைத்து வைத்துள்ள கோதுமை
மாவினை ஊற்றவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வேக விடவும்.
கையில் தண்ணீர் தொட்டு களியில் கை வைத்தால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். இந்த பதம் வந்ததும் இறக்கவும்.
சாம்பார், பொரியல், குழம்பு, ரசம், தயிர் பிசைந்து இதனை சாப்பிடலாம்.
சத்தான கோதுமை மாவு களி ரெடி.