அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் மாணவர்களுக்கு
கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் 6 முதல்
9ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம்.
முதல்கட்டமாக, வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.
செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையிலான இந்த பயிற்சி வகுப்பு காலை
9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். இந்த வகுப்பின் போது,
மாணவர்களுக்கு அஞ்சல் தலை சேகரிப்பு, கடிதம் எழுதும் கலை போன்றவை பயிற்சி
அளிக்கப்படும்.
ஒரு மாணவருக்கு 250 கட்டணம். இத்தொகைக்கு ஈடாக அஞ்சல்தலை வைப்பு கணக்கு
மற்றும் அஞ்சல்தலைகளும் மாணவர்களுக்கு அளிக்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு
044-2854 3199, 99529 87591 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.