
கிரெடிட் கார்ட் வேண்டுமா? லோன் வேண்டுமா? இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட
அழைப்புகள் நம்மில் அனைவருக்கும் அடிக்கடி வருவதுண்டு நாமும் அந்த அழைப்பு
எண்ணை ஸ்பேம் என பதிவு செய்வதும், ப்லாக் செய்வதுமான முயற்சிகளை
எடுத்தாலும் வெவ்வேறு எண்ணிலிருந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கும் .
சரி இவர்களுக்கு உங்களை பற்றிய தகவல் எவ்வாறு கிடைத்திருக்கும்?...
நமது தகவல் எவ்வாறு திருடப்படுகிறது..
அதிகமானோர் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் இருந்து தகவல்கள் திருப்பட்டு,
மோசடி கும்பலுக்கு விற்கப்படுகிறது.
நகல் எடுக்கும் கடையின் மூலமாகவும் நமது தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள்
உள்ளன. உதாரணமாக 4 நகல்களை எடுக்க சொன்னால், கடைக்காரர் 5 நகல்களாக
எடுத்து, 4ஐஉங்களிடம் கொடுத்து விட்டு மீதமுள்ள ஒன்றை பணத்திற்காக மோசடி
கும்பலிடம் விற்கலாம்.
தனியார் இண்டெர்நெட் மையங்களிலிருந்துபடிப்பு அல்லது வேலை சம்மந்தமான
படிவங்களை பூர்த்தி செய்யும் போது தகவல் அட்டைகளை ஸ்கேன் செய்ய வேண்டி
இருக்கும்.
அப்போது உங்களது போல்டர் கணினியிலிருந்து அகற்றப்படாமல்தகவல்கள்
விற்கப்படலாம்.
மால், பொருட்காட்சி, பொழுதுபோக்கு அரங்கங்களில், லக்கி ட்ராப்
வைக்கப்பட்டிருக்கும். அதில் பொதுவாக பேர், மற்றும் மொபைல் எண்
கேட்கப்படும். பரிசு பொருளுக்கு ஆசைப்பட்டு நாமும் தகவலை கொடுத்து
விடுவோம். அவ்வாறு கொடுக்கப்படும் மொபைல் எண்கள் தவறான செயல்களுக்கும்
பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம்..
இந்த ஆபத்திலிருந்து எப்படி தப்பித்துக் கொள்ளலாம்..
பெரும்பாலும் சமூக வலைதளங்களில் முகவரி தொடர்பான தகவல்கள், மொபைல் எண் போன்றவற்றை பதிவு செய்ய கூடாது.
நகல் எடுக்கும் எந்திரத்தில் நீங்கள் சொன்ன எண்ணிக்கை மட்டும் பதியப்படிருக்கிறதா? என பார்க்க வேண்டும்.
ஆன் லைன் பதிவின் போது உங்களைப்பற்றிய தகவல் உள்ள போல்டரை டெலிட் செய்ய கூறி கவனிக்க வேண்டும்.
பெரும்பாலும் சரியான தகவல் இல்லாத லக்கி ட்ராப் பாக்ஸில் உங்கள் முகவரி, மொபைல் எண்ணை எழுதி போட வேண்டாம்.
இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் மோசடி கும்பலிடம் நமது தகவல் செல்லாமல் தப்பித்து கொள்ளலாம்...