இதுகுறித்து அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
நகர, ஊராட்சி வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளுக்கான முதன்மை பயிற்சி வகுப்புகள் முடிவடைந்துள்ளன. மாவட்டந்தோறும், முதன்மை பயிற்றுநர்கள் அனைவரும் பிற ஊழியர்கள்,பணியாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிப்புகுறித்த பயிற்சிகளை அளிப்பர்.
ஒப்புகைச் சீட்டு இயந்திரம் இல்லை:
இதேபோன்று, நகரப் பகுதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது எனவும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.








