டிப்ளமோ தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை
பெறுவதற்காக நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பங்களை
செலுத்தும் கால அவகாசம் ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து
கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடகத்தில் உள்ள
பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படித்துள்ள மாணவர்கள், லேட்டரல் என்ட்ரி
திட்டத்தின்கீழ் பொறியியல் கல்லூரிகளில் (பகல் மற்றும் மாலை) 2-ஆம் ஆண்டு
3-ஆவது செமஸ்டரில் சேர்க்கை பெறுவதற்காக பொதுநுழைவுத்தேர்வு ஜூலை 14-ஆம்
தேதி நடக்கவிருக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் டிப்ளமோ மாணவர்களிடமிருந்து
விண்ணப்பங்களை ஜூன் 6-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு கேட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து இந்த தேர்வுக்கு
விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஜூன் 10-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கட்டணத்தை ஜூன் 11-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஜூன் 20-ஆம்
தேதிக்கு பிறகு தேர்வுநுழைவுச்சீட்டை இணையதளத்தில் இருந்து தரவிறக்கம்
செய்துகொள்ளலாம். ஜூலை 14-ஆம் தேதி காலை 10 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை
அனைத்துமாணவர்களுக்கும் பொதுநுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணிவரை வெளிமாநில மற்றும் எல்லைப்பகுதி கன்னட மாணவர்களுக்கு பெங்களூரில் மட்டும் கன்னடமொழிப்பாட தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணிவரை வெளிமாநில மற்றும் எல்லைப்பகுதி கன்னட மாணவர்களுக்கு பெங்களூரில் மட்டும் கன்னடமொழிப்பாட தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.