தமிழகத்தில் வரும்
23-ஆம் தேதி நடைபெறவுள்ள கணினி ஆசிரியர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு
ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்கள், இளநிலை கணினி அறிவியல் படிப்புடன் பி.எட். முடித்தவர்களும், தேசிய கல்வியியல் கவுன்சில் விதிகளின்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான, கணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்புடன் பி.எட்., முடித்தவர்களும் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அண்மையில் அரசாணை வெளியிட்டது.

இதைப் பின்பற்றி, 814 கணினி ஆசிரியர் காலியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. கடந்த மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிட்டது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
கணினி பயிற்றுநர் நிலை 1-க்கான (முதுநிலை நிலை) கணினி வழித் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு உரிய அனுமதிச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தேர்வர்கள் பயனியர் குறியீடு மற்றும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யும் வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.